Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பிரதமர் வேட்பாளரை பெரிக்காத்தான் நேஷனல் அறிவிக்க வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரதமர் வேட்பாளரை பெரிக்காத்தான் நேஷனல் அறிவிக்க வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.18-

16 ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் வேளையில் பிரதான எதிர்க்கட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ள பெரிக்காத்தான் நேஷனல், தனது பிரதமர் வேட்பாளரை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் சீர்திருத்த இயக்கமான பெர்சே கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றம் அல்லது பேரணி வாயிலாக பதவி விலகும்படி பிரதமருக்குக் கோரிக்கை விடுப்பதற்கு முன்னதாக மாற்று அணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அனைவரும் அறிந்து இருக்க வேண்டும்.

பிரதருக்கு எதிராக எந்தவோர் அறிவுறுத்தலை விடுப்பதற்கு முன்னதாக நாம் யார், எந்த நிலையில் இருக்கிறோம், எதற்காக இந்தக் கோரிக்கை விடுக்கிறோம் என்பதற்குப் பதில் சொல்வதற்கு முன்னதாக எதிர்க்கட்சியினர், தங்கள் பிரதமர் வேட்பாளரைத் தயார்படுத்துவது மிக முக்கியம் என்று பெர்சே தலைவர் ஃபைசால் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →