டிச. 15-
பிரதிநிதிகளில் இனம், பாலினம் குறிப்பாக, பெண்களுக்கான கோட்டா முறையை அறிமுகப்படுத்தும் பிகேஆர்கட்சியின் சட்ட திருத்தம் துணிச்சலான, முற்போக்கான நடவடிக்கை ஆகும் என அக்கட்சியின் துணைத் தலைவரான செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார் . இது சமூக நீதியையும் கட்சியின் சட்ட விதிகளில் சமத்துவத்தையும் உறுதி செய்வதற்கான பிகேஆர்-இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
முன்னதாக, குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பெண்கள் மட்டும் இன்றி, பல்வேறு இன அடிப்படையிலான முடிவெடுக்கும் செயல்பாட்டில் பங்கேற்பதை அதிகரிக்க உதவும் என்றார்.
இந்த கோட்டா முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், பிகேஆர் கட்சி பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதுடன், சிறுபான்மயினரின் கருத்துக்ளுக்கு முன்னுரிமை வழங்கும் அடித்தளத்தையும் அமைக்கிறது. இதனால், பல்வேறு இனத்தவரின் தேவைகளுக்கு ஏற்ப பதிலளிக்கும் வகையில் அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும், அதே நேரத்தில் பெண்கள் அரசியலில் பங்கேற்பதைத் தடுக்கும் பாரம்பரிய தடைகளை உடைக்கும் என சரஸ்வதி கூறினார்.








