லீமா, நவ.14-
மலேசியாவிற்கு வருகை தரும்படி தாம் விடுத்துள்ள அழைப்பை பெரு நாட்டின் அதிபர் டினா எர்சில்லா பொலுவார்டே ஏற்றுக்கொண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பெரு அதிபரின் மலேசிய வருகை, அடுத்த ஆண்டு இறுதியில் அமையும் என்று பிரதமர் விளக்கினார். தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லீமாவில் நடைபெற்று வரும் ஆசிய பசிபிக் பொருளாதார உச்ச நிலை மாநாடான APEC- கில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்று அரசாங்க மாளிகையில் பெரு அதிபரை சந்தித்தார்.
பெரு அதிபருடன் நடத்தப்பட்ட இரு வழி சந்திப்பின் போது, மலேசியாவிற்கு வருகை தரும்படி தாம் விடுத்துள்ள அழைப்பை அதிபர் டினா எர்சில்லா பொலுவார்டே உடனடியாக ஏற்றுக்கொண்டு இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.








