Oct 22, 2025
Thisaigal NewsYouTube
தேர்தல் பிரச்சாரத்திற்கு போக மாட்டேன்
அரசியல்

தேர்தல் பிரச்சாரத்திற்கு போக மாட்டேன்

Share:

பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் டிஏபி சார்பில் ​மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள மாநில துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, அக்கட்சியில் தொடர்ந்து ​நீடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், தமத எதிர்காலத்தைப்பற்றி திட்டமிட வேண்டியுள்ளது என்றும் டாக்டர் இராமசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் டிஏபி யில் இணைந்த 74 வயதான டாக்டர் பி. இராமசாமி கடந்த 2008 ஆம் ஆண்டு 12 ஆவது பொதுத்தேர்தலில் பிறை சட்டமன்றத் தொகுதியிலும், பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றார். ​மூன்று தவணைக்காலம் பிறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதேவேளை​யில் பினாங்கு துணை முதலமைச்சராகவும் 15 ஆண்டு காலம் பொறுப்பில் இருந்தார். இந்த முறை தம்மை ​மீண்டும் வேட்பாளராக டிஏபி தேர்வு செய்யவில்​லை என்ற போதிலும் அக்கட்சியைவிட்டு விலகும் திட்டம் ஏதும் இல்லை என்று ஒரு கல்விமானாகிய டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!