நவ. 17-
மலேசியாவில் அரசு ஊழியர்களுக்கானப் புதிய சம்பள முறை அடுத்த டிசம்பரில் நடப்புக்கு வருவ வருவதால்,பவர்களின் ஆக்கத்திறன் மேம்பாடும் முக்கியமாகிறது என, நாட்டின் தலைமைச் செயலாளர், Shamsul Azri Abu Bakar தெரிவித்தார். இப்புதிய முறையின் மூலம் ஊதிய உயர்வு கிடைத்தாலும், அரசு ஊழியர்கள் தங்களது வேலைத் தரம், அர்ப்பணிப்பு, பொறுப்பு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த புதிய சம்பள முறை அரசு ஊழியர்களின் நலனையும் நன்மையையும் மட்டும் கவனிப்பதில்லை, அதே சமயம் சேவை வழங்குவதில் உள்ள திறனை அதிகரிக்க ஊக்கத்தை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
ஊதிய உயர்வு, பணி மாற்றம், பணியாளர் எண்ணிக்கையை குறைத்தல், பல்வேறு துறைகளில் இரட்டை வேலைகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் அரசு சேவையின் கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் வலுப்படுத்தும் என்றார்.
இதன் மூலம் ஒவ்வொரு ஊழியருக்கும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், பல்வேறு துறைகளில் தங்களைத் தகவமைத்துக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் மேலும் சொன்னார்.








