Dec 3, 2025
Thisaigal NewsYouTube
டான் ஶ்ரீ விக்னேஸ்வரனிடம் விளக்கம் கோரப்படும்
அரசியல்

டான் ஶ்ரீ விக்னேஸ்வரனிடம் விளக்கம் கோரப்படும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் மஇகா இணைவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அதன் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனிடம் நேரடியாக விளக்கம் கோரப்படும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் விரைவில் டான் ஶ்ரீ விக்னேஸ்வரனுடன் தாம் கலந்துரையாட விரும்புவதாக துணைப் பிரதமருமான அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூரில் மொழிக் காப்பகமான டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவில் கலைக் களஞ்சிய வெளியீடு மற்றும் மொழிப் பெயர்ப்பாளர்கள், ஆசிரியர் நியமன நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெரிக்காத்தானுடன் ஒத்துழைக்க அல்லது சேர மஇகா திறந்த மனப்பான்மையுடன் இருப்பதாக இதற்கு முன்பு டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தமது எண்ண அலைகளை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அது இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது என்றும் தீர்க்கமாக முடிவு செய்யப்படவில்லை என்றும் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியிருந்தார்.

பாஸ் மற்றும் பெர்சத்துவுடனான மஇகாவின் உறவு, பழைய வைரிகளான அம்னோ மற்றும் ஜசெக இடையிலான உறவைப் போல விரோதமானது அல்ல என்றும் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

"பாஸ் மற்றும் பெர்சத்துவின் தலைமையுடன் மஇகா முன்பு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பணியாற்றியுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி பாஸ் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான், பல கட்சிகள் பெரிகாத்தானில் சேர விருப்பம் தெரிவித்ததாகக் கூறினார். ஆனால் அவை பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சிகளை உள்ளடக்கியதா என்று கேட்ட போது அவற்றின் பெயரைக் கூற அவர் மறுத்து விட்டார்.

Related News