Oct 24, 2025
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் முன்னாள் அமைச்சர்
அரசியல்

குற்றச்சாட்டை மறுத்தார் முன்னாள் அமைச்சர்

Share:

முன்னாள் அமைச்சர் ஒருவர், தமக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாக 37 வயது மாது ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டை பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரும், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சருமான அமாட் பைசல் அசுமு மறுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண், தமக்கு எதிராக அவதூறு தன்மையில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பேரா மாநில முன்னாள் மந்திரி புசாருமான அமாட் பைசல், கோலாலம்பூர், ஸ்ரீ ஹர்தமாஸ் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் பிளாசா டமாஸ் என்ற இடத்தில் அந்த முன்னாள் அமைச்சர் தமக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக அந்தப் பெண் கூறுகிறார்.

எனினும் அந்த பெண் குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் இடத்தில் தாம் இல்லை என்றும் அந்த நேரத்தில் நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் தாம் கலந்து கொண்டதாகவும், அதற்கான ஆதாரங்களை தாம் கொண்டுள்ளதாகவும் அமாட் பைசல் தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

குற்றச்சாட்டை மறுத்தார் முன்னாள் அமைச்சர் | Thisaigal News