ஜொகூர்,ஆகஸ்ட் 18
ஜொகூர், குளுவாங், மஹ்கோட்டா மாநிலச் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தேசிய முன்னனி புதிய உத்திகளைக் கையாளும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கிளாந்தான், நெங்கிரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உத்தி முறைகளை அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜொகூர், குளுவாங், மஹ்கோட்டா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தேசிய முன்னனி பயன்படுத்தாது என்று அதன் தலைவர் DATUK SERI டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடிதெரிவித்துள்ளார்.
நெங்கிரி மாநிலச் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னனி பெரும்பான்மையில் வெற்றி பெற்று அத்தொகுதியை கைப்பற்றி இருந்தாலும் அதே வகையிலான உத்திகள் வெவ்வேறு எண்ணிகையில் வாக்காளர்கள் உள்ள மற்றொரு மாநில தேர்தலுக்குச் சாத்தியப்படாது என்று அம்னோ தலைவருமான DATUK SERI டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி விவரித்துள்ளார்.
அதுமட்டுமின்றி மஹ்கோட்டா மாநிலச் சட்டமன்றத்தில் மொத்தம் 66 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர்களில் 4 ஆயிரம் பேர் இராணுவ வீரர்கள் என்றும்; 400 பேர் போலிஸ் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களில், 52 விழுக்காட்டினர் 39 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் என்பதையும் DATUK SERI டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், ஜொகூரில் உள்ள பல மையங்களின் ஒத்துழைப்பு மஹ்கோட்டா மாநிலச் சட்டமன்றத் இடைத்தேர்தலில் தேசிய முன்னனியின் வெற்றியை உறுதி செய்ய துணைபுரியும் என்று அவர் விளக்கமளித்தார்.
யுனிவர்சிட்டி துன் ஹுசைன் ஆன் மலேசியா (UTHM) -இல் நடைபெற்ற 15-வது தேசிய அளவிலான கோர் சிஸ்வா சிஸ்வி தற்காப்பு மாணவர் படையின் அணிவகுப்பின் நிறைவு விழாவிற்கு பின், செய்தியாளர்களைச் சந்தித்த DATUK SERI டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடிஅவ்வாறு கூறினார்.








