Jan 20, 2026
Thisaigal NewsYouTube
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அன்வாரின் நிலையை பாதிக்காது
அரசியல்

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அன்வாரின் நிலையை பாதிக்காது

Share:

விரைவில் ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் எந்த வகையிலும் பிரதம​ர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிலையை பாதிக்க செய்யாது என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நம்புகிறது.

மாநில தேர்தல்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், கூட்டரசு அரசாங்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக, எம்.பி.க்களின் பெரும்பான்மையான ஆதரவு அன்வாருக்கு இருக்கும் வரையில் அவரின் நாற்காலி ஆட்டம் காணாது என்று அக்கூட்டணி கூறுகிறது.

இந்த ஆறு மாநில​ தேர்தல்களில் 4 மாநிலங்கள் மிக முக்கியமானதாகும். கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பான் மகத்தான் வெற்றி பெறுமானால், அன்வா​ரின் செல்வாக்கு அதிகரிக்கும். அதேவேளையில் அவற்றை கைப்பற்ற தவறுமானால், அதனால் மத்திய அளவில் அரசியல் நிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், கவனமாக செயல்பட வேண்டிய எச்சரிக்கையை பக்காத்தான் ஹராப்பானுக்கு விடுக்கும் என்று அந்த கூட்டணி கூறுகிறது.

Related News