Jun 25, 2026
Thisaigal NewsYouTube
"கூட்டணி மாற்றத்திற்கு முன் இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்வோம்" - எம்.சரவணன் தகவல்
அரசியல்

"கூட்டணி மாற்றத்திற்கு முன் இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்வோம்" - எம்.சரவணன் தகவல்

Share:

மலேசியாவில் இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான மஇகா, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவது குறித்த எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்யும் என அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கூட்டணி தலைமையை கருத்தில் கொண்டு, இந்திய சமூகத்தின் கருத்துகளை அறியாமல், எந்த அரசியல் மாற்றத்தையும் அவசரமாக மேற்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாஸ் தலைமையுடன் இணைவதில் மஇகாவுக்கு பிரச்சினையில்லை என்றாலும் கூட, இந்திய சமூகம் அதனை ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்த கவலை இருப்பதை எம்.சரவணன் ஒப்புக் கொண்டுள்ளார்.

அதேவேளையில், தற்போது ஆலய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மாற்றம் குறித்து எந்தவொரு முடிவையும் தற்போதைய சூழலில் எடுக்க இயலாது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.சரவணன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related News