Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கம்யூனிஸ்டு சிந்தாந்தத்தினால் உந்தப்படவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கம்யூனிஸ்டு சிந்தாந்தத்தினால் உந்தப்படவில்லை

குளுவாங் , செப்டம்பர் 26-

அண்மையில் தமது தலைமையில் சீனாவிற்கு சென்ற பாரிசான் நேஷனல் பேராளர்கள் குழுவினர், அந்த நாட்டின் கம்யூனிஸ்டு சிந்தாந்தத்தினால் உந்தப்படவில்லை என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெளிவுபடுத்தியுள்ளார்.

சீன அரசாங்கத்தின் அதிகாரத்துவ அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு வழக்கமான பயணமே தவிர அது கம்யூனிஸ்டு சிந்தாந்தத்துடன் தொடர்புடைய பயணம் அல்ல என்பதையும் அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் விளக்கம் அளித்தார்.

இதற்கு முன்வு, சீன நாட்டின் அரசாங்கப் பேராளர்கள், அம்னோ மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். அந்த வருகைக்கு பதில் வருகையாகவே பாரிசான் நேஷனல் பேராளர்களளின் இந்தப் பயணம் அமைந்துள்ளது அகமட் ஜாஹிட் சுட்டிக்காட்டினார்.

துரித வளர்ச்சியைக் கண்டு வரும் சீனாவிடமிருந்து நாம் எதையெல்லாம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை ஆராய நோக்கில் தங்களின் இந்த சீன வருகை அமைந்து இருந்ததாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →