Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அம்பாங் தொகுதியுடன் இரண்டறக் கலந்து இருப்பேன்: ரோட்ஸியா இஸ்மாயில்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அம்பாங் தொகுதியுடன் இரண்டறக் கலந்து இருப்பேன்: ரோட்ஸியா இஸ்மாயில்

கோலாலம்பூர், ஜூன்.10-

அம்னோவிலிருந்து விலகியுள்ள முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் மூலம் போட்டியிடலாம் என்று ஊகங்கள் ஏற்பட்டுள்ள வேளையில் அந்த தொகுதியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருந்து வரப் போவதாக ரோட்ஸியா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அம்பாங் தொகுதியை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிகேஆ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இப்போதுதான் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தொகுதி மக்களுக்கு எனது சேவை தொடர்ந்து தேவைப்படுகிறது என்று ரோட்ஸியா இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →