புத்தாதான், அக்டோபர்.18-
சபா மாநிலத்தின் 17ஆவது பொதுத் தேர்தலில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு கூட்டணி அல்லது கட்சியுடன் இணைந்து கூட்டு அரசில் ஒத்துழைப்புக் கொள்வதற்கு அம்னோ தயாராக இருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார்.
வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கூட்டணியும், அல்லது அரசியல் கட்சியும் மாநில அரசாங்கத்தை அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையைப் பெற முடியாது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
எனவே அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு மற்ற கட்சி அல்லது கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு கொள்ளத் தயாராக இருப்பதாக பாரிசான் நேஷனல் தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.