வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கம் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் மத்திய அரசில் மாற்றம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்து வரும் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் கடுமையாக சாடினார்.
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் இந்த கூற்று, “தெளிவான பொய்” என்று ராம் கர்ப்பால் வர்ணித்துள்ளார்.
கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட கட்சி தாவல் தடுப்புச் சட்டம், எம்.பி.க்கள் கட்சிவிட்டு கட்சித் தாவுவதை தடுக்கும் என்று ராம் கர்ப்பால் விளக்கினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சி மாறினால், அவர்களின் இடங்கள் காலியாகிவிடும் என்றும், இது இடைத்தேர்தலுக்கு வழி வகுக்கும் என்பதுடன் கட்சி மாறியவர்கள் தேர்தலில் மீண்டும் வேட்பாளராக போட்டியிட முடியாது என்பதையும் டிஏபி எம்.பி.யான ராம் கர்ப்பால் விளக்கினார்.
“மாநில தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் பெரிய வெற்றி பெற்றால், அது மத்திய அரசாங்கம் அளவில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறி மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்க ஹாடி முயற்சிக்கிறார் என்று ராம் கர்ப்பால் குற்றஞ்சாட்டினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


