Oct 15, 2026
Thisaigal NewsYouTube

எதிர்பார்த்த ஒன்றுதான், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கூறுகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எதிர்பார்த்த ஒன்றுதான், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கூறுகிறார்

கோலாலம்பூர், டிச. 28-


தம்முடைய எஞ்சிய சிறைத்தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்திடம் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகம் இன்று கேட்டுக்கொண்டு இருப்பது, எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கூறுகிறார்.

நஜீப், அதற்கான விண்ணப்பத்தை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால் சல்லே கேட்டுக்கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மாமன்னரிடம் பேசிய போது, அந்த விவகாரம் மன்னிப்பு வாரியத்திடம் கொண்டு செல்லப்பட்டதா? என்ற ஒரு கேள்வியை சட்டத்துறை தலைவரிடம் தாம் முன்வைக்க விரும்புவதாக அக்மால் குறிப்பிட்டுள்ளார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →