Sep 25, 2026
Thisaigal NewsYouTube
நாளை வேட்புமனுத்தாக்கல்: நெகிரி செம்பிலான் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது
அரசியல்

நாளை வேட்புமனுத்தாக்கல்: நெகிரி செம்பிலான் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை, ஜூலை 18-ஆம் தேதி சனிக்கிழமை, மாநிலம் முழுவதுமுள்ள 8 மையங்களில் நடைபெறவிருக்கிறது. தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் விதிமுறைகளின்படி காலை 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மக்களை மையமாகக் கொண்ட பக்காத்தான் ஹராப்பான் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மொத்தமுள்ள 36 தொகுதிகளிலும் களம் இறங்குகிறது. பாரிசான் நேஷனல் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

வேட்புமனுத்தாக்கல் அமைதியாகவும் சீராகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய, நூற்றுக்கணக்கான தேர்தல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு, அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மாநிலம் முழுவதும் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

மாநிலத்தில் நிலவும் அமைதிச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், ஆதரவாளர்கள் எவ்விதத் தூண்டுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என அரச மலேசிய போலீஸ் படை எச்சரித்துள்ளது.

Related News