பாஸ் கட்சியின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி நச்சுத்தன்மையாக மாறிவிட்டதாக பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் குற்றம் சாட்டியுள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் வேட்பாளர் அறிமுக விழாவில் பேசிய அவர், தொகுதிப் பங்கீட்டில் பாஸ் கட்சி தங்களைப் புறக்கணித்துவிட்டு, தன்னிச்சையாகச் செயல்படுவதாகச் சாடினார். இதனால், இக்கூட்டணியில் இருந்து பெர்சத்து வெளியேறக்கூடும் என அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், 'இக்கத்தான் பிரஹாதின் ராக்யாட்' அமைப்பின் கீழ் உள்ள கட்சிகளுடன் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கப் பெர்சத்து திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.








