Sep 25, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் உத்திகளால் பாதிக்கப்படாமல் செயல்திறன் அரசியலில் பி.எச் கவனம்
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் உத்திகளால் பாதிக்கப்படாமல் செயல்திறன் அரசியலில் பி.எச் கவனம்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அரசியல் உத்திகளால் பாதிக்கப்படாமல், தங்களின் தற்போதைய சிறந்த ஆட்சித் திறனை நிலைநிறுத்துவதில் பக்காத்தான் ஹரப்பான் கவனம் செலுத்தும் எனத் தேசிய ஏ.எம்.கே துணைத் தலைவரும், இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சருமான டாக்டர் முகம்மது தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

இன்று சுங்கைப்பட்டாணியில் மடானி கித்தா நிகழ்ச்சியைத் திறந்து வைத்துப் பேசிய அவர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மற்ற கட்சிகளைக் குறை கூறாமல், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் 'செயல்திறன் அரசியலை' மட்டுமே முன்னெடுக்கும் என்றார்.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் தலைமையிலான தற்போதைய அரசு, மாநிலப் பொருளாதாரத்தை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News