Dec 20, 2025
Thisaigal NewsYouTube
விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்
அரசியல்

விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்

Share:

கோலாலம்பூர், ஜன.3-

துணைப் பிரதமர் AHMAD ZAHID HAMIDIக்கும் DAP கட்சியின் தலைவர் லிம் குவான் எங்கிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஒரு சிறிய பிரச்சினையே என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றும், விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குவான் எங் அம்னோவைப் புண்படுத்தும் விதமாக பேச வேண்டாம் என்று ZAHID நேற்று அறிவுறுத்தினார், ஏனெனில் அம்னோவும் தற்போதைய அரசாங்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

குவான் எங்கின் அரசியல் காலம் முடிந்துவிட்டது என்றும், தற்போதைய DAP தலைமையை அவர் நம்ப வேண்டும் என்றும் அம்னோவின் தலைவர் ZAHID கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளிடையே நல்லுறவைப் பேண வேண்டியதன் அவசியத்தை இந்த கருத்து வேறுபாடு உணர்த்துகிறது.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக வரும் திங்கட்கிழமை புத்ராஜெயாவில் நடைபெறவிருக்கும் பேரணியில் பக்காதான் ஹரப்பான் கூட்டணிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பிரதமர் அன்வார் தெளிவுபடுத்தினார். இந்தப் பேரணியை பாரிசான் நேஷனல் ஏற்பாடு செய்துள்ளது என்றும், பக்காதான் ஹரப்பான் அதில் பங்கேற்கவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

பாஸ் கட்சி, நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக ஒரு பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. அக்கட்சியின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹாசன் ஊக்கப்படுத்தியுள்ளார். இந்த பேரணி, நஜிப் ரசாக்கிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

Related News