Dec 19, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

ஸ்கேம் மோசடிகளுக்கு 4 சமூக வலைத்தளங்கள் முக்கிய இலக்கு

Share:

கோலாலம்பூர். ஜன. 20-


ஸ்கேம் மோசடிகளில் ஈடுபட்டு வரும் கும்பல்கள், மக்களை ஏமாற்றுவதற்கு நான்கு சமூக வலைத்தளங்களை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஸ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.

மோசடிக் கும்பல்கள் Facebook, Tik Tok, Whats App மற்றும் Telegram ஆகியவற்றை தங்களை மோசடிகளுக்கு தளமாக பயன்படுத்தி லட்சக்கணக்கான ரிங்கிட்டை ஏப்பம் விட்டு வருகின்றன என்று அமைச்சர் விளக்கினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் இது போன்ற மோசடிகளில் 500 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு அதன் மதிப்பீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி 14 வகையான மோசடிகள் நிகழ்ந்து இருப்பதையும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் தரவுகள் வழி தெரியவந்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News