மஇகாவும், மசீச.வும் மிக குறைந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை கொண்டு இருப்பதால் அவ்விரு கட்சிகளும் அரசியலில் நீடிக்க இனி ஊராட்சி மன்றங்களில் உள்ள பதவிகளை நம்பித்தான் காலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர் கணித்துள்ளார். பாரிசான் நேஷனலின் இந்த இரண்டு கட்சிகளும் தற்போது 3 நாடாளுன்றத் தொகுதிகளையும், 12 சட்டமன்றத் தொகுதிகளையும் கையில் வைத்திருக்கின்றன. கடந்த பொதுத் தேர்தலில் மசீச 2 நாடாளுமன்றத் தொகுதிகளையும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்றது.மஇகா ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை கொண்டுள்ளது. கைவசம் இருந்த ஜெராம் பாடாங் தொகுதியையும் இழந்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் வரையில் மசீச. மற்றும் மஇகாவின் இந்த பலவீனமான நிலை நீடிக்கும் நிலையில், அவ்விரு கட்சிகளும் இனி ஊராட்சிமன்றப் பதவிகளை நம்பியிருக்க வேண்டிய ஓர் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட் கூறுகிறார்.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


