May 3, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் காணப்பட்டது ஏன்? - அன்வாரிடம் விளக்கம் கேட்கிறது பெரிக்காத்தான்
அரசியல்

மலேசியாவில் இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் காணப்பட்டது ஏன்? - அன்வாரிடம் விளக்கம் கேட்கிறது பெரிக்காத்தான்

Share:

மலேசிய கடல் எல்லையில் அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் காணப்பட்டது குறித்து அரசாங்கம் விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்று பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வடக்கு பட்டர்வொர்த் கொள்கலன் முனையத்தில், அமெரிக்காவின் இரண்டு கடலோரப் போர் கப்பல்கள் நங்கூரமிட்டிருந்ததாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

இக்கப்பல்கள் வெடிகுண்டு அகற்றும் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டவை என்றும், முன்னதாக மத்திய கிழக்கில் பணியில் ஈடுபட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின், அக்கப்பல்கள் மலேசிய விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டதாக விளக்கம் அளித்திருந்தார்.

இருப்பினும், இது போன்ற அறிக்கைகள், மத்திய கிழக்கு போரில் மலேசியா கடைப்பிடித்து வரும் நடுநிலைக் கொள்கைக்கு முரணாக இருக்குமா? என்ற கவலை எழுந்துள்ளதாக பெரிக்காத்தான் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

போரில் மலேசியா எவ்விதப் பங்கும் வகிக்காது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்பை பெரிக்காத்தான் வரவேற்றபோதிலும், மலேசியக் கடல் எல்லைக்குள் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த கப்பல்களின் இருப்பு, போரில் மலேசியாவிற்கு மறைமுக பங்களிப்பு உள்ளதா என்ற கேள்விகளை எழுப்புவதாகவும் தக்கியுடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு