நெங்கிரி, ஜூன் 04-
நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் முகமது அஜீஸ் அபு நைம்-மின் நிலை குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, பெர்சாத்து கட்சியிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதத்திற்கு, தமது தரப்பு காத்திருப்பதாக, கிளந்தான் சட்டமன்ற தலைவர் முகமது அமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அக்கடிதம் பெறப்படும் வரையில், முகமது அஜீஸ் சட்டமன்ற உறுப்பினராக அவரது கடமையைத் தொடர்வார் என முகமது அமர் அப்துல்லா கூறினார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்திற்கு ஆதரவை வழங்கிய குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது அஜீஸ் உள்பட, 7 மக்கள் பிரதிநிதிகள், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பெர்சாத்து கட்சிக்கான தங்களது விசுவாசத்தை தெரிவிக்க தவறியுள்ளனர்.
அதனையடுத்து, கட்சியில் அவர்கள் அனைவரது உறுப்பினர் தகுதியும் பறிபோனதாக கூறியிருந்த பெர்சாத்துவின் இளைஞர் பகுதியான அர்மடா தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமல்.
சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கும்படி, வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மக்களவை தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல்-லிடம் வலியுறுத்தப்படும் என கூறியிருந்தார்.








