Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பொருளாதார உயர்வுடன் கூடிய சுபிட்சமான வாழ்விற்கு பக்காத்தான் ஹராப்பானைத் தேர்வு செய்க: வாக்காளர்களுக்குத் தெங்கு ஜப்ருல் அழைப்பு
அரசியல்

பொருளாதார உயர்வுடன் கூடிய சுபிட்சமான வாழ்விற்கு பக்காத்தான் ஹராப்பானைத் தேர்வு செய்க: வாக்காளர்களுக்குத் தெங்கு ஜப்ருல் அழைப்பு

Share:

வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில், டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை மாநில மக்கள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என்று பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகரும், முன்னாள் முதலீடு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சருமான தெங்கு டத்தோஸ்ரீ சஃபுருல் தெங்கு அப்துல் அஜிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நெகிரி செம்பிலான் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான கூட்டணி அரசு மிகத் திறம்பட வழிநடத்தி வருவதாக நெகிரி செம்பிலான், பிடிஎம் ஆயர் குனிங்கில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெங்கு சாஃபுருல் சுட்டிக்காட்டினார்.

மாநில மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதிலும் , மாநிலத்தை முன்னெடுக்கும் தூர நோக்குத் திட்டத்திலும் திறம்பட நிரூபித்து இருக்கும் லிங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பானுக்கு தலைமையேற்று இருக்கும் டத்தோஸ்ரீ அமினுடினும், / இதர பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மாநில மக்களை தெங்கு ஜப்ருல் கேட்டுக்கொண்டார்.

டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூனின் சிறந்த நிர்வாகத்தின் மூலம் மட்டுமே மாநிலத்தில் நிலையான பொருளாதார உயர்வை ஏற்படுத்தி, மக்கள் அனைவரும் ஒரு சுபிட்சமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்றும் தெங்கு சாஃபுருல் வலியுறுத்தினார்.

Related News

 நெகிரி செம்பிலான் அரச பரிபாலன விவகாரம்: ஜசெக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலிஸ் நிலையத்தில் புகார்

நெகிரி செம்பிலான் அரச பரிபாலன விவகாரம்: ஜசெக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலிஸ் நிலையத்தில் புகார்

பிரித்தாளும் வெளிப்புற சக்திகளை புறந்தள்ளி, கூட்டு வலிமைக்கு முன்னுரிமை கொடுத்து சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்: நெகிரி செம்பிலான் மாநில இந்திய சமூகத்திற்கு டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் அறிவுறுத்தல்!

நெகிரி செம்பிலான் மெந்திரி பெசார் அமினுடின் ஹருன் கேள்வி: பிகேஆர் தேர்தல் வாக்குறுதிகளை விட மாநிலத்தின் தற்போதைய முதலீட்டு சாதனை மிக அதிகம்

நெகிரி செம்பிலான் மெந்திரி பெசார் அமினுடின் ஹருன் கேள்வி: பிகேஆர் தேர்தல் வாக்குறுதிகளை விட மாநிலத்தின் தற்போதைய முதலீட்டு சாதனை மிக அதிகம்

போர் சூழலிலும் மலேசியா நிலைத்திருக்க மடானி அரசாங்கமே காரணம் / செயல்பாடுகளை வைத்து மதிப்பிட மலேசியர்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள்

போர் சூழலிலும் மலேசியா நிலைத்திருக்க மடானி அரசாங்கமே காரணம் / செயல்பாடுகளை வைத்து மதிப்பிட மலேசியர்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள்

சிறைச்சாலைச் சட்டத் திருத்தம் குறித்து தொடர்புடைய இலாக்காக்களுடன் அரசு ஆலோசனை: உள்துறை அமைச்சர் தகவல்

சிறைச்சாலைச் சட்டத் திருத்தம் குறித்து தொடர்புடைய இலாக்காக்களுடன் அரசு ஆலோசனை: உள்துறை அமைச்சர் தகவல்

வெற்றி பெற்றால் கேஎப்சி, ஃபேமிலிமார்ட் கொண்டு வருவேன் – பெர்சாத்து வேட்பாளரின் கவர்ச்சிகரமான வாக்குறுதி

வெற்றி பெற்றால் கேஎப்சி, ஃபேமிலிமார்ட் கொண்டு வருவேன் – பெர்சாத்து வேட்பாளரின் கவர்ச்சிகரமான வாக்குறுதி