Oct 25, 2025
Thisaigal NewsYouTube
பிரான்சைஸ் தொழில்துறையில் சாத்தியமான முதலீடுகள்
அரசியல்

பிரான்சைஸ் தொழில்துறையில் சாத்தியமான முதலீடுகள்

Share:

கோலாலம்பூர், நவ. 28-


நாட்டில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பிரான்சைஸ் தொழில்துறையில் 911 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சாத்தியமான முதலீடுகள் பதிவாகியுள்ளதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

இது, நாட்டில் பிரான்சைஸ் தொழில்துறையில் தொழில் உரிமம் பெற்றர்களுக்கு ஊக்கமளிக்கும் வளர்ச்சியின் பதிவாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

பிரான்சைஸ் தொழில்துறையில் கடந்த ஆண்டு பதிவான 700 மில்லியன் ரிங்கிட்டுன் ஒப்பிடுகையில் இது கூடுதல் முதலீடாகும் என்று துணை அமைச்சர் வர்ணித்தார்.

கடந்த ஆண்டு முதலீட்டுத்திறன் 700 மில்லின் ரிங்கிட்டிற்கும் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு அது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரிங்கிட்டை எட்டும் டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை பிரான்சைஸ் ஆலோசனை வாரியக்கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ ரமணன் இவ்விவரத்தை குறிப்பிட்டார்.

முன்பு, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச்செலவின அமைச்சின் கீழ் இருந்த பிரான்சைஸ் ஆலோசனை வாரியம், தற்போது தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு இருப்பதையும் துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பிரான்சைஸ் தொழிலை மேம்படுத்தும் வகையில் பிரான்சைஸ் ஆலோசனை வாரியத்தின் வாயிலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் டத்தோஸ்ரீ ரமணன் தெளிவுப்படுத்தினார்.

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் என்ற முறையில் டத்தோஸ்ரீ ரமணன் உட்பட மொத்தம் 15 பேர், பிரான்சைஸ் ஆலோசனை வாரியத்தில், வாரிய உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

பிரான்சைஸ் ஆலோசனை வாரியத்தில் புதிய உறுப்பினராக ஏபிஎஸ். மஞ்சா சென்.பெர்தஹாட நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியான சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழில் சபையை சேர்ந்த டத்தோ டாக்டர் ஏபி சிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.

டத்தோ டாக்டர் ஏபி. சிவத்தின் நியமனத்திற்கான கடிதத்தை டத்தோஸ்ரீ ரமணன் இன்று வழங்கினார்.

பிரான்சைஸ் தொழில்துறை குறித்த கொள்கைகள் மற்றும் அத்தொழில்துறைக்கான வியூகம் தொடர்புடைய பரிதுரைகளை தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சுக்கு பரிந்துரைப்பது இந்த பிரான்சைஸ் ஆலோசனை வாரியத்தின் பிரதான பங்களிப்பாகும்.

Related News