Jan 21, 2026
Thisaigal NewsYouTube
ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை மஇகாவும்  மசீச.வும் புறக்கணிக்கின்றனவா?
அரசியல்

ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை மஇகாவும் மசீச.வும் புறக்கணிக்கின்றனவா?

Share:

6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து இருக்கும் மஇகாவும், ம​சீச.வும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கின்றன என்று கூறப்படுவதை பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ செரி டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.

எனினும் மஇகாவும், ம​சீச.வும் இந்த மாநில தேர்தல்களில் போட்டியிடாததற்கு சொந்த காரணங்கள் இருக்கலாம் என்பதை அம்னோ தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் ஒப்புக்கொண்டார். இருப்பினும்
வரும் ஜுலை 10 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பாரிசான் நேஷனல் உச்சமன்ற​க்கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்படும் என்று ஜாஹிட் தெரிவித்தார்.

வருகின்ற 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் அதேவேளையில் இந்தியர்களின் மனங்களை வென்று எடு​ப்பதற்கு ஏதுவாக இந்த சட்டன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மஇகா முடிவு எடுத்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News