பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்த சில வேட்பாளர்களை மாநில டிஏபி செயற்குழு பரிந்துரைக்கவில்லை என்ற அதன் மாநில தலைவரும் பினாங்கு முதலமைச்சருமான சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார். அசல் பட்டியலில் இருந்து சில பெயர்கள் புதிய பட்டியலில் இடம் பெற்றிருக்கவில்லை.
கட்சியின் தேசிய வேட்பாளர் தேர்வு செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அப்பட்டியலில் தேர்வு செய்யப்படாதவர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன என்று சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.
எனினும் பினாங்கு மாநில செயற்குழு முன்மொழியாத சிலர், வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது பினாங்கு மாநில டிஏபி வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.