Jan 20, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்?                                                           பிரதமர் அன்வார் விளக்கம்
அரசியல்

அம்னோ மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்? பிரதமர் அன்வார் விளக்கம்

Share:

கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் தொடங்கிய அம்னோ பேராளர் மாநாடடின் திறப்பு விழாவில் தாம் கலந்து கொண்டதற்கான காரணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.

2023 ஆம் ஆண்டிற்கான அம்னோ மாநாட்டின் தொடக்க விழாவில் தாம் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம், மக்களுக்கு நன்மை அளிக்க வேண்டும், ஒற்றுமை அரசாங்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அதன் தொடக்க விழாவில் தாம் கலந்து கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஆற்றிய தலைமையுரை தொடர்பாக நிருபர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் மேற்கண்டாவாறு கூறினார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு அம்னோ தளத்திற்கு திரும்பியிருப்பது குறித்து அன்வாரிடம் வினவப்பட்டது.
மாநாட்டில் கலந்து கொண்டது, நாட்டிற்கு தாம் ஆற்றி வரும் கடமைகளில் இதுவும் ஒன்றாகும். தனிப்பட்ட முறையில் தமக்கு ஒரு நூதன அனுபவமாகும். ஆனால், அது நாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை விட மேலானது அல்ல என்பதை அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News