Sep 23, 2026
Thisaigal NewsYouTube
முதியோர்களின் போக்குவரத்துச் சிரமங்களுக்கு முறையான தீர்வு: பிலா தொகுதி பக்காத்தான் வேட்பாளர் நூர் ஜுனிதா உறுதி
அரசியல்

முதியோர்களின் போக்குவரத்துச் சிரமங்களுக்கு முறையான தீர்வு: பிலா தொகுதி பக்காத்தான் வேட்பாளர் நூர் ஜுனிதா உறுதி

Share:

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிலா தொகுதியைத் தற்காத்துப் போட்டியிடும் பக்காத்தான் ஹரப்பான் சார்பில் பிகேஆர் வேட்பாளர் நூர் ஜுனிதா முகமட் இப்ராஹிம், தாமான் பகாகியா டெலிமா பகுதியில் வசிக்கும் முதியோர்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.

அப்பகுதியில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது, முதியோர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளுக்குச் செல்லவும் பொதுப் போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அவரிடம் நேரடியாக முறையிட்டனர்.

தற்போது அப்பகுதித் தலைவர் தார்மீக அடிப்படையில் அவர்களுக்கு உதவி வருவதைப் பாராட்டிய நூர் ஜுனிதா, இக்கோரிக்கைகளைத் தாம் முழுமையாகக் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், முதியோர்களுக்குத் தேவையான முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related News