Oct 2, 2026
Thisaigal NewsYouTube

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து லீ சியான் சுங் விலகினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து லீ சியான் சுங் விலகினார்

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து லீ சியான் சுங் விலகினார்

பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி தலைமையிலான பார்ட்டி பெர்சாமா மலேசியா நிகழ்ச்சியில் லீ பங்கேற்றதைத் தொடர்ந்து, அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தாம் கட்சியில் இருந்து விலகிவிட்டதாகவும் முன்னாள் பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குநரான லீ, தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், பெர்சாமா நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தொடர்ந்து, தனது தொகுதிக்கான ஒதுக்கீடுகளை நிர்வகிக்கும் மைகாஸ் இணையவழி அமைப்புக்கான அணுகல் தடுக்கப்பட்டதாக லீ முன்னதாகக் கூறியிருந்தார்.

தாம் இன்னும் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகவும், அரசாங்கக் கூட்டணியில் இருந்து விலகியதாக ஒருபோதும் அறிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் கோரியிருந்தார்.

அதேவேளையில், கடந்த ஜூன் 12 ஆம் தேதி, பிகேஆர் மத்திய தலைமைத்துவக் குழுவிலிருந்தும் லீ விலகியிருந்தார்.

அப்போது அவர் பிகேஆர் உறுப்பினராகத் தொடர்வதுடன், நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றுவேன் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →