Aug 26, 2026
Thisaigal NewsYouTube
லிம் வாதம் ஒரு பொய்யுரையாகும்
அரசியல்

லிம் வாதம் ஒரு பொய்யுரையாகும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 27-

கடந்த 2018 ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு தாம் தலைமையேற்று இருந்த போது, நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருந்த டிஏபி தலைவர் லிம் குவான் எங்கை தமது அமைச்சரவையிலிருந்து நீக்கப்போவதாக தாம் மிரட்டியதாக கூறப்படுவதை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மறுத்துள்ளார்.

லிம் குவான் எங்கின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அது வெளிப்படையான பொய்யுரையாகும் என்று துன் மகாதீர் வாதிட்டார். இரண்டாவது முறையாக தாம் பிரதமராக பொறுப்பேற்று இருந்த போது லிம் குவான் எங்கை மிரட்டியது கிடையாது.

குறிப்பிட்ட விவகாரங்களில் லிம் குவான் எங்வுடன் தாம் மாறுப்பட்ட கருத்துக்களை கொண்டு இருந்த போதிலும் பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சியின் தலைவர் என்ற முறையில் லிம்மின் அந்தஸ்துக்கு தாம் தொடர்ந்து மதிப்பு அளித்து வந்ததாக துன் மகாதீர் முகமது இன்று விளக்கினார்.

Related News