Oct 30, 2025
Thisaigal NewsYouTube
ஜுரைடா மேல்முறையீட்டில் டிசம்பர் 11 இல் தீர்ப்பு
அரசியல்

ஜுரைடா மேல்முறையீட்டில் டிசம்பர் 11 இல் தீர்ப்பு

Share:

புத்ராஜெயா,அக்டோபர் 01-

PKR கட்சியின் நிபந்தனையை மீறி, கட்சிவிட்டு கட்சித் தாவியதற்காக அக்கட்சிக்கு ஒரு கோடி வெள்ளி இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று தமக்கு எதிராக
பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்பில் அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர்டத்தோ ஜுரைடா கமருடின் செய்து கொண்ட மேல்முறையீட்டில் அப்பீல் நீதிமன்றம் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி தீர்ப்பளிக்கவிருக்கிறது.

முன்னாள் அம்பாங் - எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான ஜுரைடா-விற்கு PKR கட்சி விதித்த நிபந்தனை செல்லத்தக்கது என்றும், / அக்கட்சிக்கு அவர் ஒரு கோடி வெள்ளி இழப்பீடு மற்றும் 50 ஆயிரம் வெள்ளி வழக்கு செலவுத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் / கடந்த ஆண்டு ஜுன் மாதம் 23 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அக்தர் தாஹிர் தீர்ப்பு அளித்து இருந்தார்.

அத்தீர்ப்பை எதிர்த்து ஜுரைடா செய்து கொண்டுள்ள மேல்முறையீடு மீதான விசாரணை, இன்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Related News