புத்ராஜெயா, அக்டோபர்.08-
17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் கடந்த திங்கட்கிழமை சபா மாநிலத்தின் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பதற்கு அடுத்த வாரம் செவ்வாக்கிழமை தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் தனது சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவிருக்கிறது.
சபா சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை சபா நாயகர் டத்தோ ஶ்ரீ பங்லிமா காட்ஸிம் எம் யஹாயாவிடமிருந்து தாங்கள் பெற்றுள்ளதாக எஸ்பிஆர் பொதுச் செயலாளர் டத்தோ கைருல் ஷாரி தெரிவித்தார்.
சபாவின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அந்தக் கூட்டத்தில் நிர்ணயிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.