Oct 12, 2026
Thisaigal NewsYouTube

புகார்களின் அடிப்படையிலேயே மறு தேர்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகார்களின் அடிப்படையிலேயே மறு தேர்தல்

கோலாலம்பூர், ஏப்ரல்.25-

நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் தொகுதி அளவிலான தேர்தலி சில தொகுதிகளில் மறு தேர்தல் நடத்தப்படுவதற்கு எடுக்கப்பட்ட முடிவானது, தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற புகார்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று தேர்தல் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

புகார்களைப் பெற்றப் பின்னர் வெறுமனே மறு தேர்தல் நடத்தப்படுவதற்கு முடிவு எடுக்கப்படவில்லை. மாறாக, அந்த புகார்களைத் தீர விசாரணை செய்து, ஆராயப்பட்டது.

மறு தேர்தல் நடத்தப்படுவதற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருக்கும் தொகுதிகளுக்கு மட்டுமே மறு தேர்தல் நடத்தப்படுவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக டாக்டர் ஸலிஹா விளக்கினார்.

குறிப்பாக, வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற முறையிலிருந்து வாக்களிப்பு முறை வரை முழுமையாக ஆராயப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சருமான டாக்டர் ஸலிஹா தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →