டிச. 15-
இன்று நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது. PKR கட்சியின் பொதுச் செயலாளர் Fuziah Salleh கூறுகையில், மூன்றில் இரண்டு பங்கு பேராளர்கள் கட்சியின் அனைத்து சட்டத் திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, கட்சியின் உயர்மட்ட ஆறு பதவிகளுக்கும், மத்திய செயற்குழுவின் 20 உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்சியின் இந்த சட்டத் திருத்தத்தில் பாலினம், இனக் கோட்டா நிர்ணயம் செய்யும் கொள்கையும் அடங்கும் என்றார் அவர்.
இதற்கிடையில், 2024 - 2025ஆம் ஆண்டுகளுக்கான தேசிய மாநாட்டின் புதிய தேதிகள், மத்திய செயற்குழுவின் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த சட்டத் திருத்தத்தில் , இயங்கலை வாயிலாக வாக்களிக்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது என்று PKR தகவல் இயக்குநர் Fahmi Fadzil கூறினார். இனிமேல் பிரதிநிதிகள் நேரில் வந்தும் தங்கள் கிளைகளில் இயங்கலை வாயிலாகவும் வாக்களிக்கலாம் என்றார்.








