Oct 29, 2025
Thisaigal NewsYouTube
கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது
அரசியல்

கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது

Share:

கிளாந்தான்,ஜூலை 28-

ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள NENGGIRI சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான 6 வேட்புமனு பாரங்கள் இதுவரை வாங்கப்பட்டிருப்பதை கிளாந்தான் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த 6 வேட்புமனுக்கான பாரங்களும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளால் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வாங்கப்பட்டதாக கிளாந்தான் தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் FAKHRUL RAZI AB WAHAB கூறியுள்ளார்.

மேலும், NENGGIRI சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News