கோலாலம்பூர், நவம்பர்.02-
புத்ராஜெயாவைக் கைப்பற்றும் அளவிற்கு பாஸ் கட்சிக்கு இன்னும் போதுமான ஆதரவு இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
தனக்கு போதுமான ஆதரவு இல்லாத காரணத்தினாலேயே அந்த கட்சி, இன்னும் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கிறது என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிச்சையாகப் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது, பிரதமராக வர முடியாது என்பது பாஸ் பொறுப்பாளர்களுக்கு நன்கு தெரியும் என்று துன் மகாதீர் தெரிவித்தள்ளார்.








