குவாந்தன்,ஆகஸ்ட் 18
கிளாந்தான் நெங்கிரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் 3R எனப்படும் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் குறித்த அவதூறு கூற்றை வெளியிட்டது தொடர்பாக பேரிக்கான் நேஷனல்-லின் தலைவர் டான்ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் மீது 28 போலிஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவ்விவகாரம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பஹாங் போலிஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அச்சம்பவம் தொடர்பாக, பஹாங்கில் இதுவரை செய்யப்பட்ட 28 புகார்களுக்கும் விசாரணை அறிக்கையும் கட்டாயம் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.








