நெகிரி செம்பிலான், ரெப்பா சட்டமன்றத் தொகுதியை டிஏபி யின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ். வீரப்பன் நான்காவது முறையாக தற்காத்துக்கொண்டார். நேரடிப் போட்டியில் 5,950 வாக்குகள் வித்தியாசத்தில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் எலைன் யோங் லி யி ஐ, வீரப்பன் தோற்கடித்தார். வீரப்பனுக்கு 11,507 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் எலைன் யோங் கிற்கு 5,557 வாக்குகளும் கிடைத்தன. தம்பின், புக்கிட் ரொக்கான் பெல்டா குடியேற்றவாசியின் மகனான வீரப்பன், கடந்த 2008, 2013 ஆகிய இரு தேர்தல்களில் ரெப்பா தொகுதியின் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஒரு வழக்கறிஞரான வீரப்பன், பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நெகிரி செம்பிலான் மாநில அரசில் ஓர் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்று இருந்தார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


