கோலாலம்பூர், ஜூலை 1-
அரசியலமைப்பு முடியாட்சி அமைப்பு முறையில் ஒரு வரலாற்றுத் தருணத்தை குறிக்கும் மற்றொரு நிகழ்வாக நாட்டின் 17 ஆவது மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் முடிசூட் விழா நடைபெறுவதற்கு இன்னும் 19 நாட்களே உள்ளன.
வரும் ஜுலை 20 ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் உள்ள பாலைருங் சேரியில் நடைபெறவிருக்கும் மலேசியாவின் அரசிலமைப்பு முடியாட்சி முறையின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் நிகழ்வாக இது அமையவிருக்கிறது.
, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மக்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக அமையவிருக்கும் மாமன்னரின் அரியணை விழா, சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த ஏற்பாடுகள் குறித்து பெர்னாமாவுடன் பகிர்ந்து கொண்ட இஸ்தானா நெகாராவின் டத்தோ பாதகா மகாராஜா லேலா டத்தோ அசுவான் எஃபெண்டி ஜைராகித்னைனி , 6 மாதங்களுக்கு முன்பே அரியணை விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 93 விழுக்காடு ஏற்பாடுகள் முடிவுற்று விட்டது என்றார் அவர்.
மலேசியா வலுவான நாகரிகம் மற்றும் புகழ்பெற்ற வரலாற்றுடன் முடியாட்சி அமைப்பு முறை நிறுவப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்திலிருந்து இதுவரை, மாமன்னரின் முடிசூட்டு விழா ஒரு முக்கிய விழாவாக மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக டத்தோ அசுவான் எஃபெண்டி தெரிவித்தார்.
ஜோகூர் மாநில சுல்தானான மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி மலேசியாவின் மாமன்னராக பொறுப்பேற்றார். இந்த அரியணை விழா மூலம் மலேசிய மலாய் ஆட்சியாளர்களின் அடையாளத்தை உலகுக்கு காட்ட முடியும், அதன் தனித்துவத்தை உயர்த்திப் காட்ட இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரியணை விழா ஏற்பாடுகளில் அரண்மனை ஊழியர்கள மட்டுமின்றி அரச மலேசிய போலீஸ் படை, ஆயுதப்படை, பொதுப்பணித்துறை உட்பட மற்ற அரசாங்க ஏஜென்சிகளும் முழு வீச்சில் ஈடுபட்டு வருதாக டத்தோ அசுவான் எஃபெண்டி தெரிவித்தார்.








