Nov 12, 2025
Thisaigal NewsYouTube
சபா தேர்தலில் ஜிஆர்எஸ் கூட்டணி 55 இடங்களில் போட்டியிடுகிறது
அரசியல்

சபா தேர்தலில் ஜிஆர்எஸ் கூட்டணி 55 இடங்களில் போட்டியிடுகிறது

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.12-

வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிஆர்எஸ் கூட்டணி 55 இடங்களில் போட்டியிடுகிறது.

கபுங்கான் ரக்யாட் சபா எனும் ஜிஆர்எஸ் கூட்டணியின் தலைவரும், சபா முதலமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் இன்று கோத்தா கினபாலுவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை அறிவித்தார்.

ஜிஆர்எஸ் சார்பில் போட்டியிடுகின்ற 55 வேட்பாளர்களில் 51 வேட்பாளர்களின் பெயர்களை அவர் இன்று அறிவித்தார்.

இதன் வழி சபாவின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிஆர்எஸ் கூட்டணி 55 இடங்களிலும், பாரிசான் நேஷனல் 41 இடங்களிலும், பிகேஆர் 10 இடங்களிலும், சபா ஜசெக 7 இடங்களிலும், சபா முற்போக்கு கட்சியான SAPP, 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

சபா முன்னாள் முதலமைச்சரும் PBS கட்சியின் தோற்றுநருமான Joseph Pairin Kitingan- னின் சகோதரர் Jeffrey Kitingan தலைமையிலான Parti Solidariti Tanah Airku எனும் STAR கட்சி, 40 இடங்களில் போட்டியிடவிருப்பதாக இன்று அறிவித்துள்ளது.

இதனிடையே ஜிஆர்எஸ் சார்பில் போட்டியிடுகின்றவர்களில் 35 விழுக்காட்டினர் அனுபவம் வாய்ந்தர்கள் மற்றும் இளையோர்கள் என்று சபா முதலமைச்சசர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தெரிவித்தார்.

சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Related News