கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகட் நூரை பாஸ் கட்சியின் பாரம்பரிய சட்டமன்றத் தொகுதியான ஜெனெரியில் வீழ்த்துவது என்பது அசாத்தியமானது என்பதை அத்தொகுதியில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடும் முஹமாட் கிஸ்ரி அபு காசிம் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் ஜெனெரி தொகுதி பாரிசான் நேஷனலின் கோட்டையாக விளங்கியது. அத்தொகுதியில் அம்னோ செல்வாக்குப் பெற்று இருந்தது. எனினும் அந்த தொகுதி எப்போது பாஸ் கட்சியிடம் வீழ்ந்ததோ அன்றே அது அந்த மதவாத கட்சியின் கோட்டையாக மாறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். அந்த தொகுதி பல முறை, அம்னோ மற்றும் பாஸ் கட்சிக்கு இடையே மாறி மாறி வசமாகியுள்ளது. எனினும் அது தற்போது கெடா மந்திரி புசாரின் பலம் பொருந்திய தொகுதியாக மாறியுள்ளதால் அதனை கைப்பற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல என்று அவர் குறிப்பிடுகிறார்.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


