Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் வேட்பாளர்: அமினுடின் ஹாருன் தொடர்வார் என அன்வார் உறுதி
அரசியல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் வேட்பாளர்: அமினுடின் ஹாருன் தொடர்வார் என அன்வார் உறுதி

Share:

மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பக்காத்தான் அரப்பான் கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாருன் மீண்டும் மந்திரி பெசாராகத் தொடர்வார் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், தங்களது தரப்பு ஏற்கனவே வேட்பாளரைத் தீர்மானித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளைப் போல தங்கள் தரப்பில் மந்திரி பெசார் பதவிக்காக யாரும் போட்டிபோடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், கடந்த கால சாதனை மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் சிகாமாட் தொகுதி வாக்காளர்களின் ஆதரவைக் கோரியுள்ளார்.

சிகாமாட் சட்டமன்றத் தொகுதியில் இதற்கு முன்பு ஆற்றிய சேவைகள் மற்றும் மக்களின் தேவைகளைக் கவனித்த விதம் போன்ற காரணங்களால் அமினுடின் ஹாருன் மீது மக்களிடையே வலுவான நற்பெயர் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தொடர மீண்டும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News