Oct 28, 2025
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி ஆட்சியில் கவனம் செலுத்த விரும்புகிறது
அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி ஆட்சியில் கவனம் செலுத்த விரும்புகிறது

Share:

நவம்பர்- 10

நாட்டின் 16வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் உடன் DAP கூட்டணி அமைப்பது குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் அதிகமாக உள்ளது. தற்போதைக்கு DAP, ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி ஆட்சியில் கவனம் செலுத்த விரும்புகிறது என DAPயின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்கி, நாட்டை நல்ல முறையில் நிர்வகிக்கும் பட்சத்தில், இந்த கூட்டணியை தேர்தலுக்குப் பிறகும் தொடரலாம் என்று நம்புவதாக அவர் அக்கட்சியின் சிலாங்கூர் மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

DAP - BN கூட்டணி தற்போது மிகவும் வலுவாக உள்ளது. அதே சமயம், ஆட்சியில் உள்ள அமைச்சரவை நன்றாக செயல்படுகிறது. கட்சியைப் பொறுத்த வரையில், சிலாங்கூரில் DAPயைச் சேர்ந்த பல திறமையான இளைய தலைவர்கள் உள்ளனர், ஆனால் நாடாளுமன்றத் தொகுதிகள் குறைவாக இருப்பதால் சிலர் வேறு மாநிலங்களில் போட்டியிட வேண்டி உள்ளது. தற்போது, Bangi, Damansara, Puchong, Klang ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகள் DAP வசம் உள்ளன எனவும் அவர் கூறினார்.

Related News