மஇகாவிலிருந்து விலகியுள்ள அதன் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன், எந்தவொரு புதிய கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில் டான்ஸ்ரீ முகைதின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோ செரி ஹம்ஸா ஸைனுடினை சந்தித்ததை மேலவை உறுப்பினரான டத்தோ சிவராஜ் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், பெரிக்காத்தான் நேஷனலில் இணைவது குறித்து எந்தவொரு முடிவையும் தாம் எடுக்கவில்லை என்று டத்தோ சிவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமது தலைமையில் ஒரு குழு, ஹம்ஸா ஸைனுடினை சந்தித்தது தொடர்பில் அவர், பெரிக்காத்தான் நேஷனலில் இணையப் போகிறார் என்று வெளியாகியுள்ள ஆருடம் தொடர்பில் டத்தோ சிவராஜ் கருத்துரைத்தார்.
ஹம்ஸா ஸைனுடினுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் அக்கூட்டணியில் இணைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுவதை டத்தோ சிவராஜ் மறுத்தார். மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்ட பின்னர் ஹம்ஸா ஸைனுடினை இரண்டு முறை சந்தித்ததாக டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
