பாஸ் கட்சி, நோயையும், பேரிடரையும் பற்றிக்கொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பாஸ் கட்சியின் இந்த செயல் மிகவும் ஆபத்தானதாகும் என்று பிரதமர் நினைவுறுத்தினார். தம்மைப் பொறுத்தவரையில் எந்தவொரு அரசியல் கட்சியும் மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக ஆட்சியாளர்கள் விவகாரத்தை கையில் எடுக்குமானால் அக்கட்சிக்கு அறவே அனுதாபம் காட்டப்படாது என்று பிரதமர் நினைவுறுத்தினார்.
மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஷ்ரின் ஷா, கூறியதாக வெளியிடப்பட்ட ஒரு போலியான காணொளி தொடர்பில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள பாஸ் கட்சி குறித்து குறிப்பிடுகையில் பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நாட்டின் தலைவர் என்ற முறையில் தம்மை சீண்டிப்பார்ப்பதற்கு மக்களுக்கு உரிமையுண்டு. ஆனால், அந்த சீண்டல் வரம்புமீறியானால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுவே ஆட்சியாளர்கள் என்றால் எந்தவொரு தரப்பினருக்கும் அனுதாபம் காட்டப்படாது. ஒவ்வொரு குடிமகனும் ஆட்சியாளர்களுக்கும், நாட்டிற்கும் விசுவாசமாக இருப்பது அவசியமாகும். அதேவேளையில் ஆட்சியாளர்கள் விவகாரத்தை யாராவது கையில் எடுக்க முற்படுவார்களோனால் நோய்க்கும், பேரிடருக்கும் விலை கொடுப்பதைப் போல அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் அன்வார் எச்சரித்தார்.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


