வரும் ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் மலாய்க்கார வாக்காளர்களை கவர்ந்திழுக்க முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அறிமுகப்படுத்திய மலாய் பிரகடனத்தை முக்கிய பிரச்சார ஆயுதமாக பெரிக்காத்தான் நேஷனல் பயன்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்துவதாக கூறி, துன் மகாதீர் கையில் எடுத்துள்ள மலாய் பிரகடனத்தை தேர்தல் வியூகத்திற்குரிய பிரம்மாஸ்திரமாக பயன்படுத்துவது தொடர்பில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், துன் மகாதீரை சந்தித்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் மலாய்க்காரர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக சுழட்டி எடுப்பதற்கு மலாய் பிரகடனம் முக்கியப் பங்காற்றும் என்பதை இரு தலைவர்களுமே ஒப்புக்கொண்டுள்ளர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முற்பகுதியில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஷெரட்டன் நகர்வுக்கு பிறகு முகைதீன் யாசினும், துன் மகாதீரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டது இதுவே முதல் முறையாகும் என்று மலாய் பிரகடன செயலகத்தின் நிர்வாகத் தலைவர் கைரிடின் அபு ஹஸ்ஸான் தெரிவித்தார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


