ஷா ஆலாம், அக்டோபர்.31-
அம்னோவில் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படும் அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் அதன் இளைஞர் பிரிவு நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
அம்னோ இளைஞர் பிரிவு நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்வது மூலம் இளைஞர் பிரிவு வலுப்பெற முடியும் என்று அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கோலாலம்பூர் அம்னோ கட்டடத்தின் Auditorium UMNO-வில் பாரிசான் நேஷனல் வட்ட மேஜை கலந்தாய்வு ஒன்று நடைபெறவிருக்கிறது. அதில் ஒரு பேச்சாளராக கைரி கலந்து கொள்ளவிருக்கிறார் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால் சாலே தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.








