Mar 10, 2026
Thisaigal NewsYouTube
12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: மாணவர்களுக்குத் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வாழ்த்து!
அரசியல்

12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: மாணவர்களுக்குத் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வாழ்த்து!

Share:

சென்னை, மார்ச் 03 – தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களுக்குத் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள். நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!"

அரசியல் களத்தில் தடம் பதித்துள்ள விஜய், கடந்த காலங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர் தெரிவித்துள்ள இந்த வாழ்த்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி, தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தமிழகக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்:  சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்: சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து