திரெங்கானு மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இல்லாத நிலையில் அரசாங்க சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களை எதிர்க்கட்சி சட்டம ன்ற உறுப்பினர்களாக நியமிக்கும்படி அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவர் கைரி ஜமாலுடீன் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் நடைமுறைக்கு அப்பாற்பட்ட நிலையில் தேர்வு செய்யப்படும், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள், திரெங்கானு சட்டமன்றம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் என்று கைரி குறிப்பிட்டார்.
தவிர திரெங்கானு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இல்லையென்றாலும் பாஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம் ஒரு பொறுப்புள்ள நிர்வாகமாக செயல்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு நியமன எதிர்க்கட்சி உறுப்பினர்களை சட்டமன்றத்தில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும் என்று கைரி வலியுறுத்தினார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


